1 WIN BASKER'S REVELATIONS "பாஸ்கரின் கடவுள் உடல் சுழற்சி விதி"

 "பாஸ்கரின் கடவுள் உடல் சுழற்சி விதி"

பாஸ்கருள் கடவுள் உபதேசித்த இயற்கை மெய்ஞான உபதேச உண்மையானது,

மனிதர் தாவரங்களின் உடல்களை உண்டதால் தாவர உடல் மனித உடலானது. 

மனிதர் விலங்குகளின் உடல்களை உண்டதால் விலங்கு உடல் மனித உடலானது. 

மனிதர் பறவைகளின் உடல்களை உண்டதால் பறவை உடல் மனித உடலானது. 

மனிதர் மீன்களின் உடல்களை உண்டதால் மீன் உடல் மனித உடலானது. 

மனிதர் புழு பூச்சி வைரஸ்  பாக்டீரியாக்களின் உடல்களை உண்டதால் புழு பூச்சி வைரஸ்  பாக்டீரியா உடல் மனித உடலானது. 

இதுதான் இயற்கை விதி என்பதால் மனிதர்களின் உடலானது தாவரம், விலங்கு, பறவை, மீன், புழு, பூச்சி, வைரஸ், பாக்டீரியா என மனிதர்கள் உடல் எதை உண்டு வாழ்ந்து வளர்ந்ததோ அவற்றால் உண்ணப்பட்டு அவைகளின் உடல்களாக மாறி வெளிபடுகிறது. இதுவே பாஸ்கரின் கடவுள் உடல் சுழற்சி விதி ஆகும்.  

இது மனித உடல் விலங்கு உடல் பறவை உடல் மீன் உடல் புழு உடல் பூச்சி உடல் பாக்டீரியா உடல் வைரஸ் உடல் என எல்லா உடல்களுக்கும் பாஸ்கரின் கடவுள் உடல் சுழற்சி விதி பொருந்தும். உடல்கள் உடல்களை உண்டு வாழ்ந்து வளர்வதால் மட்டுமே இயற்கை நிகழ்கிறது, இயற்கை எல்லா காலமும் சமநிலையில் உள்ளது.  உடல்களின் ஒட்டுமொத்த வெளிதோற்றமே பிரபஞ்ச இயற்கை தோற்றம் ஆகும். பிரபஞ்சம் என்பது நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம் எனும் ஐந்தின் வெளிப்பாடு, இதுவே உடல்களின் வெளிப்பாடும் ஆகும்.    

மனித உடல் புதைத்தாலும் எரித்தாலும் இந்த இயற்கை  விதியிலிருந்து விலகுவதில்லை.    எரித்தால் சாம்பலாகி இந்த நிகழ்வுகள் நிகழ்கின்றன. மனித அகோரிகள் இறந்த மனித உடல்களை உண்பதால் மனித உடல் மனித உடலாக சில காலம் உள்ளது.

இந்த இயற்கை சுழற்சியில்  எந்த உடலுக்கும் விதிவிலக்கு இல்லை. இதனையே பிறவி என்று ஆன்மிகம் உணர்த்துகிறது.

எனவே இந்த உடல் என்பது இயற்கை சுழற்சிக்கு உட்பட்டது என்பதை உணர்ந்து மனித உடல் ஏதாவதாக ஆகும் என உணர்ந்து வாழவும்.

பல கோடான கோடி ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்கையில் அதிக பட்ச மனித வாழ்நாளான 120 ஆண்டுகள் என்பது பூமியின் அளவில் மனித உருவம் எவ்வளவு நுண்ணியதோ அதுபோன்றதாகும்.       

மனிதர்கள் உண்டதை, உண்டது மனிதர்களை உண்ணும். இந்த உண்மையே ஞானத்தில் எல்லாம் உயர்ந்த மெய்ஞானமாகும். இந்த மெய்ஞானத்தை பாஸ்கருள் உபதேசித்த எல்லா கடவுளுக்கும் மனமார்ந்த நன்றி.

இதனை படித்துணரும் பாக்கியம் பெற்றுள்ளதால் நீங்களும் எல்லாமாக உள்ள கடவுளுக்கு நன்றி உணர்வுடையவர்களாகுங்கள்.

Copyright பாஸ்கர்.

WIN

Popular posts from this blog

YOUR CONTRIBUTIONS TO EARTH TREE PLANTING TO MITIGATE CLIMATE CHANGE

VAŠ DOPRINOS SADNJI DRVEĆA ZA UBLAŽAVANJE KLIMATSKIH PROMJENA

આબોહવા પરિવર્તનને ઘટાડવા માટે પૃથ્વીના વૃક્ષો વાવવામાં તમારું યોગદાન